• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூரில் லாரி – கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் பலி

July 27, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பட்டாம்பி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவரது மைத்துனர் பஸ்ஸில் இவர் கட்டிட கண்டிராக்டராக வேலை செய்து வருகிறார் இவரிடம் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இவர் இவருடன் வேலை செய்யும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேருடன் நேற்று இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல காரில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பைபாஸ் சாலையில்திருச்சியில் இருந்து பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு ஈச்சர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் 5 பேர் இறந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க