• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூரில் மளிகை கடையில் வாங்கிய விசிலில் ஆபாச பட பிலிம் ரோல் – பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி !

July 30, 2020 தண்டோரா குழு

கோவை சூலூரில் மளிகை கடையில் வாங்கிய விசிலில் ஆபாச பட பிலிம் ரோல் இருந்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளர்.இது குறித்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சூலூர் புதிய பேருந்து நிலையத்தில், உள்ள மளிகை கடையில் 5 ரூபாய் கொடுத்து பள்ளி மாணவர்கள் வாங்கிய குழாய் வடிவிலான விசிலில் ஆபாச பட பிலிம் ரோல் சுற்றப்பட்டு இருந்தது. இதையடுத்து மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் கோவை சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சூலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில்,

எங்கள் பகுதியில் உள்ள மளிகை கடையில் விசில் வாங்கினோம் அதில் பழைய சினிமா பட பிலிம் ரோல் குச்சி போல் சுற்றப்பட்டு அதன் மீது வண்ண காகிதம் ஒட்டப்பட்டு இருந்தது.அதைக் பிரித்து பார்த்த போது அந்த பிலிம் ரோலில் ஆபாச படங்கள் இருந்தது. உடனே அதைக் தூக்கி விசி விட்டு மீண்டும் 3 விசில் வாங்கினோம் அதிலும் அதே போல் ஆபாச படம் இருந்தது.உடனே போலீஸில் எங்கள் பெற்றோர் மூலம் புகார் தெரிவித்ததாக அவர்கள் கூறினார்.

இச்சம்பவம் குறித்து மளிகை கடை உரிமையாளர் பாலகுமாரிடம் விசாரணை செய்த போலிஸார் விசில்களை பறிமுதல் செய்து. கடைக்கு சப்ளை செய்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபாசபடங்களால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்த படங்களைக் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில், இது போன்ற பழைய ஆபாச படம் பிலிம் ரோல்கள் கிராம புற மாணவர்கள் வாங்கும் விளையாட்டு பொருட்களில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க