• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூரில் ஆம்புலன்ஸ் மோதி 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி

November 4, 2019 தண்டோரா குழு

சூலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வேன் மோதிய சம்பவத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

சூலூர் மதியழகன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரது மகன் சதீஷ் குமார் (18). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் விக்ரம்  இருவரும் நண்பர்களாவர். இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர்.நேற்று இரவு  இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு சுமார் 8 மணியளவில்  தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சூலூர் பேருந்து நிலையம் எதிரே சூலூர் நோக்கி  மிகவும் வேகமாக வந்து  கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென சாலையின் வலதுபக்கம் திரும்பி எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி அருகிலிருந்த கடைக்குள் சென்று நின்றது.இதில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சதீஷ் மற்றும் விக்ரம் தூக்கி வீசப்பட்டனர்.வாகனம் மோதிய சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து பார்க்கையில் வாலிபர்கள் இருவரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

108 ஆம்புலன்சை ஓட்டி வந்தவர் பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்பவர் படுகாயமடைந்தார்.அதைத் தொடர்ந்து அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து காரணமாக கோவை திருச்சி நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த்தும் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் உயிரிழந்த வாலிபர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

மேலும் படிக்க