• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூரிய கிரகணத்தை நேரில் காண முடியவில்லை – பிரதமர் மோடி ஏமாற்றம்!

December 26, 2019

டில்லியில் மேகமூட்டம் காரணமாக சூரியகிரகணத்தை பார்க்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசய நிகழ்வான நெருப்பு வளையத்துடன் கூடிய சூரியகிரகணம் இன்று(டிச.,26) தோன்றியது. சூரிய கிரகணத்தை நாடு முழுவதும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி சூரிய கிரகணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாட்டு மக்களை போல், சூரிய கிரகணத்தை பார்க்க நானும் ஆர்வமாக இருந்தேன். எதிர்பாராதவிதமாக, மேகமூட்டம் காரணமாக சூரியனை பார்க்க முடியவில்லை. ஆனால், கோழிக்கோடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தெரிந்த சூரிய கிரகணத்தை நேரலையில் பார்த்தேன். நிபுணர்களுடன் கலந்துரையாடி, சூரிய கிரகணம் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன்.
இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க