• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவிட்சர்லாந்து நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலி, ஒருவர் படுகாயம்

March 10, 2017

“சுவிட்சர்லாந்து நாட்டில் பேசல் நகரில் உள்ள சுவிஸ் காபேவில் வியாழக்கிழமை (மார்ச் 9) நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் உள்ளூர் நேரத்தின்படி இரவு 8:15 மணியளவில் நடந்தது. காபே 56 எனப்படும் தேநீர் விடுதிக்குள் நுழைந்த இரண்டு ஆண்கள் தங்களிடமிருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

“வழக்கறிஞர் அலுவலக குற்ற புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரனையில் காபே 56 விடுதிக்குள் நுழைந்த இரண்டு ஆண்கள் தங்களிடமிருந்த துப்பாக்கியால் சுட்டதை உறுதி செய்துள்ளது.சுட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்” என்று அதிகாரிகள் கூறினர்.

சம்பவ இடத்தின் அருகில் உள்ள சாலை மூடப்பட்டு, போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பது சுவிட்சர்லாந்து நாட்டில் மிகவும் அரிதான சம்பவம் ஆகும்.

ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் மட்டும் துப்பாக்கியைத் தங்கள் வீட்டில் வைத்திருக்க அனுமதியுண்டு. வீட்டில் நடைபெறும் சில அசம்பாவிதங்களுக்கு வீட்டில் வைத்திருக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் வீட்டில் துப்பாக்கி வைத்திருக்க அனுமதிப்பதில் பல சர்ச்சைகள் எழுகின்றன.

“இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துப்பாக்கியால் சுட்ட இருவரையும் விரைவில் கைது செய்வோம்” என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க