“ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
“சுவாதி கொலை வழக்கு” திரைப்படமாகிறது
May 30, 2017தண்டோரா குழு
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட சுவாதி கொலை சம்பவம் திரைப்படமாக வெளியாகவுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளர் ஸ்வாதி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு சம்பந்தமாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் புழல் சிறையில் இருந்த ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தற்போது திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நடித்த, உளவுத்துறை, அருண் விஜய் நடித்த ஜனனம், வஜ்ரம் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்துக்கு “சுவாதி கொலை வழக்கு” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இதன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.