• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுத்தமான காற்று நம் எல்லா தலைமுறைக்கும் தவிர்க்க முடியாத தேவை – யூனியன் வங்கி சார்பில் நடைபெற்ற ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழாவில் வனிதா மோகன் பேச்சு

November 1, 2025 தண்டோரா குழு

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாத இறுதியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையில் உள்ள யூனியன் வங்கி மண்டல அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்பிணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் யூனியன் வங்கியின் மண்டல தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமை வகித்து பேசினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிக்கால் நிறுவனத்தின் சேர் பெர்சன்,சிறு துளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என கூறிய அவர், எதிர்கால சந்ததிகளுக்கு மட்டுமின்றி தற்போது உள்ள தலைமுறைக்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம் என தெரிவித்தார்.சுத்தமான காற்று நம் எல்லா தலைமுறைக்கும் தவிர்க்க முடியாத தேவை என குறிப்பிட்ட அவர்,அதற்கு தேவையான மரங்களை வளர்ப்பதும்,நீர் நிலைகளை காப்பதும் மனித குலத்திற்கு மிகவும் தேவையாக இருப்பதாக கூறினார்.

விழாவின் இறுதியில் யூனியன் வங்கியின் கோவை பிராந்திய தலைவர் லாவண்யா நன்றியுரை வழங்கினார்.நிகழ்ச்சியில் யூனியன் வங்கியின் கோவை மண்டல,பிராந்திய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க