• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 114 வது பிறந்த நாள்

October 4, 2017 தண்டோரா குழு

திருப்பூரில் சுதந்திரப் போராட்ட தியாகி குமரனின் 114 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தியாகி குமரனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருப்பூரில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி குமரனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தியாகி குமரனின் 114 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரயில் நிலையம் அருகில் உள்ள தியாகி குமரன் நினைவிடத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி,நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னலாடை துறை அமைப்புகளின் சார்பில் நொய்யல் ஆற்றை சுத்தம் செய்யும் பணியினை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க