• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா

April 5, 2023 தண்டோரா குழு

கோவை காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2023 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.

கல்லூரியின் மேலாண் இயக்குனர் லஷ்மிநாராயணசாமி,மற்றும் சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் சுகுணா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் முதல்வர் கோவிந்தராஜுலு , டீன் ரம்யா சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு விருந்தினர்களாக, பிரபல சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷா கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நகைச்சுவையாக உரையாடினார்.

அப்போது பேசிய அவர்,

தாம் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஒரு பரிசை கூட பெற்றதில்லை என கூறிய அவர், ஆனால் தற்போது தாம் பரிசு வழங்கும் இடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்..இதே போல மாணவ,மாணவிகள் ஏதாவது ஒரு துறையில் எப்போது வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது மாணவன் நல்ல முன்னேற்றத்தை அடைய வேண்டும் என எண்ணும் ஆசிரியர்களை மாணவர்கள் எப்போதும் நினைவு கூறி போற்ற வேண்டும் எனவும் அவர் பேசினார்.. விழாவில் கௌரவ அழைப்பாளர்களாக பிரபல யோகா சாதனையாளர் வைஷ்ணவி,பிரபல பாடகர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்கள் மாநில , மாவட்ட , மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற விளையாட்டு, அறிவு திறன் கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்களும்,அண்மையில் மாநில அளவில் தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் முதல் இடம் பிடித்த சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கியும் கவுரவித்தனர்.

விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர் ,மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க