• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுகப்பிரசவத்தில் ஒரே சமயத்தில் 7 குழந்தைககளை பெற்றெடுத்த 25 வயது பெண் !

February 18, 2019 தண்டோரா குழு

கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நடந்த பிரசவம் பலருக்கு ஆச்சரியமான செய்தியாக அமைந்துள்ளது.

கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் இளம் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட 25 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண், 1 பெண் என்று 7 குழந்தைகள் பிறந்துள்ளன. புதிதாக பிறந்த குழந்தைகள் அனைத்தும் தனித்தனியாக மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தற்போது அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன. பிரசவமான பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர்.

இது குறித்து அப்பெண்ணின் கணவர் கூறுகையில்,

எங்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும். இதனால் இனியும் குழந்தை பெறும் எண்ணம் இல்லை.

ஓராண்டிற்கு முன், லெபனான் நாட்டின் செயிண்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு 6 குழந்தைகள் பிறந்தது. ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் என்பது உலகில் இது இரண்டாவது முறையாகும். உலகில் முதல் முறையாக 1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க