சீன நாட்டின் நாளிதழில் தமிழக அமைச்சர் வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் வாய்த்த செய்தியை படத்துடன் வெளியிட்டுள்ளது.
வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் 10 லட்சம் ரூபாய் செலவில் தர்மாகோல் கொண்டு மூடப்பட்டது. ஆனால் அதை மூடிய சில நிமிடத்தில் தர்மாகோல் எல்லாம் பறந்தன. இத்திட்டத்தை, வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் எனசமூக வலைத்தளங்ககளில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ராதா ரவியும் தெர்மாகோல் திட்டத்தை கிண்டலடித்து பேசினர்.
இத்திட்டம் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் பரவலாக பேசபட்டு வருகிறது.
இந்நிலையில், சீன நாட்டின் நாளிதழில் தமிழக அமைச்சர் வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் வாய்த்த செய்தியை படத்துடன் வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் “ மானம் கப்பல்ல ஏறிடுச்சுனு கேள்வி பட்டுருப்போம் இப்ப விமானமே ஏறி சீனாவுக்கெல்லாம்போயிட்டிருக்கு “ என்று கலாய்த்து வருகின்றனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்