• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் மூதாட்டியை காப்பாற்ற ரயில் பெட்டியை கவிழ்த்த மக்கள்

May 13, 2017 தண்டோரா குழு

ரயிலிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள இடைவெளியில் சிக்கிய மூதாட்டியை காப்பாற்ற ரயில் பெட்டியை சாய்த்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா நாட்டின் பெய்ஜிங்கில் அதிக கூட்டம் நிறைந்த ரயில் நிலையம் குவாங்ஷு ஆகும்.அந்த ரயில் நிலையத்திற்கு ஒரு ரயில் வந்துள்ளது. அதிலிருந்து இறங்கிய 72 வயது மூதாட்டி ஒருவர் ரயிலிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள இடைவெளியில் தவறி விழுந்துவிட்டார். அவர் விழுந்த இடத்தில் இருந்த ஒரு சிறிய இடைவெளியில் அவருடைய கால் சிக்கிக்கொண்டது.

அங்கிருந்த மக்கள் இதைக்கண்டதும் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த மூதாட்டிக்கு உதவ முன் வந்தனர். அவர் சிக்கியிருந்த இடைவெளியிலிருந்து வெளியே எடுக்க முயற்சி செய்தனர். ஆனால், அவரை வெளியே கொண்டு வர முடியவில்லை. 1௦௦ டன் எடையை கொண்ட ரயில் பெட்டியை பின்புறமாக தள்ளி அவரை விடுவிக்க திட்டமிட்டனர். அதன்படி, அனைவரும் ஒரு குழுவாக இணைந்து அந்த ரயிலை தள்ளியுள்ளனர்.

அவருடைய கால் சிக்கியிருந்த இடத்திலிருந்து காலை எளிதாக வெளியே எடுக்க உதவ, ரயில்வே ஊழியர்கள் அவருக்கு தைலம் ஒன்றை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த ரயில்வே மீட்புப்பணி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கிருந்த மக்களின் உதவியுடன் அந்த மூதாட்டியை அந்த இடைவெளியில் இருந்து பத்திரமாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.

“எனக்கு பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. முழங்கால்கள் சிறிய சிராய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது. என்னை காப்பாற்ற உதவிய மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி” என்று அந்த மூதாட்டி தெரிவித்தார்.

மேலும் படிக்க