• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீதையை கடத்தியவர் ராமர்! குஜராத் பாட புத்தகத்தால் குழப்பம்

June 1, 2018 தண்டோரா குழு

குஜராத் மாநில கல்வித்துறையால் வழங்கப்பட்ட 12-ம் வகுப்பு சமஸ்கிருதப் பாடப்புத்தகத்தில் சீதாவை கடத்தியவர் ராமர் என குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராமாயணம் கதையை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். சமஸ்கிருத மொழியில் கவிஞர் காளிதாசர் ராமாயணத்தை ரகுவம்சம் என்னும் பெயரில் கவிதை நூலாக பாடி உள்ளார்.இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஒரு பள்ளியில் 12-ம் வகுப்புக்கான சமஸ்கிருத பாடப்புத்தகத்தில் ஆங்கில மொழி பெயர்ப்புடன் அம்மாநில கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ராமாயணத்தில் சீதையை கடத்திச் சென்றது ராவணன் என்பதற்கு பதிலாக ராமர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருத இலக்கண புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த தவறான வாசகம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இது குறித்து மாநில பள்ளி பாடநூல் கழக நிர்வாக தலைவர் நிதின் பதேனியிடம் கேட்ட போது,

முதலில் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார். பின்னர் தவறை ஒப்புக் கொண்ட அவர்,இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாகும். இதில் ராவணன் என குறிப்பிடுவதற்கு பதிலாக ராமன் என குறிப்பிடப்பட்டுள்ளது.இது குஜராத் பாடநூல் கழகத்தின் தவறு இல்லை என பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க