• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவையில் ஜிகே வாசன் பிரச்சாரம்

April 11, 2019 தண்டோரா குழு

கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

கோவை பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.நடைபெற உள்ள தேர்தல் என்பது நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தேர்தல்.மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொருளாதாரத்தை உயர்த்தும் நல்லரசாக செயல்பட்டு வருகிறது.
நல்லரசாக உள்ள அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றும் நாட்டின் வளர்ச்சியை மிக சிறப்பாக செயல்படுத்துகிறது.

பாதுகாப்பை உறுதிபடுத்குகிற அரசு பாஜக தலைமையிலான மத்திய அரசு.

தமிழகத்தில் எடப்பாடி ஓபிஎஸ் அனைத்து மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக செயல்பட்டு வருகின்றனர்.மத்திய மாநில அரசுகளின் ஒத்த கருத்து என்பது முன்னேற்றத்திற்கு அழைத்து செல்லும்.

கவுண்டம்பாளையம் பகுதியில் ஆக்கப்பூர்வமான திட்டங்களை செய்யும் அரசாக அதிமுக அரசு உள்ளது.சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக வை சேர்ந்தவர்கள் அடிக்கடி மக்களைசந்திப்பவர்கள். அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை பெற்று தருவார்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க