சிலர் செய்யும் தவறால் முத்தலாக் பெண்களுக்கு எதிரான சட்டமாக சித்தரிக்கப்படுவதாக தவ்ஹீத் ஜமாஅத் குற்றசாட்டியுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்சார்பில் கோவை வ.உ.சி மைதானத்தில் “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மதரஸா மாணவ மாணவிகள் முஹம்மது நபி பற்றி பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.
அதன் பின் மத்திய பா. ஜ.க அரசு முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என நீலிக்கண்ணீர் வடித்து நடைமுறைப்படுத்த துடிக்கும் பொது சிவில் சட்டம் பற்றியும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைப்பற்றியும், தலாக் சட்டத்தின் உன்மை நிலைபற்றியும், அர்ரிளா இஸ்லாமிய பெண்கள் கல்வியகத்தை சேர்ந்த மாணவிகளின் கருத்தரங்கம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது யூசுஃப், அகிலத்தாரின் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பிலும், மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் நபிவழியில் ஒன்றினைவோம் என்ற தலைப்பிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மூத்த தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன்இறுதித் தூதரின் இறுதிப் பேருரை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது யூசுஃப்,
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றுள்ள கடந்த 3 ஆண்டுகளில் இஸ்லாமியர்கள், தலித்துகள் மீதான அடக்குமுறை அதிகரித்து இருக்கிறது. வடமாநிலங்களில் மாட்டின் பெயரால் மனிதர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் இது கண்டனத்திற்கு உரியது.
நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது என்றார். மேலும், இஸ்லாமிய பெண்கள் மீது அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்வதற்காக முத்தலாக் பிரச்சனையை அரசியல் ஆக்குகிறார்கள். யாரோ சிலர் செய்யும் தவறுகளினால் முத்தலாக்கை பெண்களுக்கு எதிரான சட்டமாக சித்தரிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் நவ்சாத் அவர்கள் தீர்மானங்கள் வாசித்தார். இதனைத்தொடர்ந்து கோவை வடக்கு மாவட்ட செயலாளர் உமர் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்