• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறையில் காவல்துறையினர் துன்புறுத்துவதாக சுகேஷ் சந்திரசேகர் மனு

April 19, 2017 தண்டோரா குழு

சிறையில் தன்னை துன்புறுத்துவதாக சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அதிமுக அம்மா அணியினை சேர்ந்த டி.டி.வி.தினகரன் மீதும் டெல்லி போலீசார் லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் துன்புறுத்தப்படுவதாகவும் இதனால் சிறையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும் அவரது சார்பில் அவரது வழக்கறிஞர் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

இதையடுத்து சுகேஷ் சந்திரசேகரின் மனுவை ஏற்று, டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை ஆணையர் நாளை நேரில் பதிலளிக்க வேண்டும் என தீஷ் ஹசாரே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க