• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறையிலிருந்து வெளியே வந்த இரண்டே நாட்களில் மீண்டும் திருட்டு – பட்டதாரி இளைஞர் கைது

December 6, 2019

கோவை அருகே திருட்டு வழக்கில் கைதாகி சிறையிலிருந்து வெளியே வந்த இரண்டே நாட்களில் 12 சவரன் நகை திருடிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை பேருரை அடுத்துள்ள ஆறுமுகன்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். சிற்பியான இவர் கடந்த 30.09.2019 தேதி சிலை வடிக்க திருச்சிக்கு சென்று விட்டார். இந்நிலையில் அன்று நள்ளிரவு அவரது மனைவி மற்றும் அவரது மகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்ம ஆசாமி வீட்டின் பீரோவில் இருந்த 12 சவரன் நகையை திருடிக் கொண்டு தப்பினார். இதுகுறித்து வழக்கு ராஜேந்திரன் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அதில் சேலம் ஓமலூரைச் சேர்ந்த பவுர் ஜேக்கப் மகன் மனோஜ் என்பதும் எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்துள்ளார் என்பதும் இவர் சிற்பி வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பன்னெண்டு சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார் மனோஜை கைது செய்து சிறையில் மேலும் கைது செய்யப்பட்டுள்ள மனோஜ் துடியலூர் வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த திருட்டு வழக்கு தொடர்புடையவர் என்பதும் திருட்டு வழக்கு ஒன்றில் சிறையிலிருந்து வெளியே வந்து இரண்டே நாட்களில் திருட்டுகளில் ஈடுபட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க