• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக ரூ.188 கோடி ஒதுக்கப்படும் முதல்வரின் அறிவிப்புக்கு கொடிசியா நன்றி

May 12, 2021 தண்டோரா குழு

இந்த நிதி ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முதலீட்டு மானிய தொகையான ரூ.280 கோடியில் ரூ. 188 கோடியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக ஒதுக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு கொடிசியா நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொரோனா காலத்தில் தொழில்நிறுவனங்கள் மேம்பட தொழில் சார்ந்த பல அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.அந்த அறிவிப்புகள் என்ன வென்றால், தகுதி உள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலமாக தடுப்பூசி போடுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவது. இந்த நிதி ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முதலீட்டு மானியத் தொகையான ரூ.280 கோடியில் 80 சதவீத தொகையை அதாவது ரூ188 கோடியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக ஒதுக்கப்படுவது.

மேலும் இத்தொகை ஒரே தவணையில் வழங்க வகை செய்யப்படுவது.ஏற்கனவே உள்ள முத்திரைத்தாள் பதிவு தொகைக்கான விலக்கு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவது. இந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை புதுப்பிக்கப்பட வேண்டிய மாசுகட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு துறை, வணிக உரிமம் போன்ற சட்ட பூர்வ உரிமைகளை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கியது.

தொழில்நுட்ப மேம்பாட்டுத்திட்டம் மற்றும் கடன் உத்திரவாத நிதி ஆதாரத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பெறப்படும் வட்டி மானியம் உடனடியாக
வழங்கப்படுவது. தொழில் வரி செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கட்ட வேண்டிய மாதாந்திர தவனைகளை கட்டுவதற்கு கால நீட்டிப்பு வழங்குமாறு மத்திய அரசையும், இந்திய ரிசர்வ் வங்கியையும் வலியுறுத்தப்படும் என தெரிவித்திருப்பது ஆகும்.

தமிழக அரசின் இந்த நேர்மறையான அணுகுமுறைக்காக முதல்வரை பாராட்டுகிறோம். தற்போதுள்ள
சிக்கலான காலகட்டத்தில் அரசாங்கத்தின் மேற்கண்ட அறிவிப்புகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு
பெருமளவு பயனளிக்கும்.

இவ்வாறு ரமேஷ் பாபு கூறியுள்ளார்.

மேலும் படிக்க