• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுவாணி நீர் கிடைப்பதில் சிக்கலா ? – கோவை மாநகராட்சி அறிக்கை

May 30, 2020 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் அளவீட்டில் எவ்விதத்திலும் பாதிக்காது என கோவை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்
வெளியிட்ட அறிக்கையில்,

சிறுவாணி அணைப்பகுதியில் கேரளா அரசால் தடை ஏற்படுத்தப்படும் என்ற வகையில் பொதுமக்களுக்கு சிறுவாணி குடிநீர் கிடைப்பதில்,சிரமம் ஏற்படும் என கடந்த சில நாட்களாக பத்திரிக்கைளிலும், ஊடகங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன.ஆனால், ஒவ்வொரு கோடைக் காலங்களிலும் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கிடைக்கப்பெற்று வரும் குடிநீர் அளவே தற்போதும் பெறப்பட்டு வருகிறது.
இந்த அளவானது வருகிற ஜீன் மாதம் இறுதி வரையிலும் எவ்வித தடங்கலும் இன்றி கிடைக்கப்பெறும்.

மேலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை கிடைக்கப் பெறவுள்ளதால் கோயம்புத்தூர் மாநகராட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் அளவீட்டில் எவ்விதத்திலும் பாதிக்காது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க