• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுவாணி அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பலி

May 1, 2019

சிறுவாணி அருகே காட்டு யானை தாக்கியதில் 65 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

காருண்யா நகரைச் சேர்ந்தவர் எஸ். சின்னமணி (65) என்ற மூதாட்டி வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு மின்சாரம் தடைபட்டதால், புழுக்கம் தாங்காமல் வீட்டின் வெளியே சின்னமணி படுத்திருந்தார். அப்போது, சுமார் 2.30 மணியளவில் அவரது வீட்டின் பக்கம் வந்த யானை சின்னமணியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு கோவை மாவட்ட வனத்துறையின் சார்பில் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்பட்டது.

மேலும் படிக்க