• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைவு – தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் வலியுறுத்தல்

May 11, 2019 தண்டோரா குழு

கோவையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் இம்மாத இறுதி வரை மட்டுமே விநியோகிக்க இருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை கேரளாவில் இருந்தாலும் நீரை அதிகளவில் பயன்படுத்துவது கோவை தான். சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, வழியோரமுள்ள  22 கிராமங்களுக்கும், மாநகராட்சியின் ஏறத்தாள 23 வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது கோடை காலமாக உள்ளதாலும், மழை இல்லாத காரணத்தாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது 49 எம் எல் டி அளவுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இருப்பு இம்மாத இறுதி வரை மட்டுமே விநியோகிக்க முடியும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

மழை பெய்தால் தான் அணையில் இருந்து நீர் எடுக்க முடியும் எனவும், சிறுவாணி அணையில் மழை குறைந்து நீர் பெறுவதில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநகரில் சிறுவாணி குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளுக்கு பில்லூர் குடிநீர் விநியோகிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குழாய்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க