• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமுகை வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானை பலி

May 19, 2017 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் மின் வேலியில் சிக்கி காட்டுயானை பலி. அளவுக்கு அதிகமாக சட்டவிரோதமாக மின்சாரம் உபயோகிக்கப்பட்டதால் யானை உயிரிழப்பு என தகவல். சிறுமுகை வனத்துறையினர் விசாரனை.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை சிட்டேபாளையத்தில் மாணிக்கம் என்பவரது விவசாய தோட்டத்தில் வனவிலங்குகள் வராமல் தடுக்க சட்டவிரோதமாக உயர் மின் அழுத்த மின்சாரத்தை தனது தோட்டத்தில் மின் கம்பிகளை கொண்டு அமைத்துள்ளார்.

இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரினை தேடி சுமார் 15வயது மதிக்கதக்க ஆண் காட்டுயானை ஒன்று அந்த வழியாக வந்த போது மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர் யானை உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.

வனத்துறையினரின் முதற்கட்ட விசாரனையில் விவசாயி மாணிக்கம் சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்சாரம் உயர் மின் அழுத்தமாக இருந்ததால் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது என தகவல் வந்துள்ளது.

இதுக்குறித்து பெத்திகுட்டை மின்வாரிய அதிகாரிகளுடன் வனத்துறை ஆய்வு செய்தனர். இதனை அடுத்து தோட்டத்தின் உரிமையாளர் மாணிக்கத்திடம் விசாரனை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க