• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமுகை பகுதியில் திருட்டு நடைபெறுவதை தடுத்த காவலர்களுக்கு கோவை எஸ்.பி பாராட்டு

May 29, 2025 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறுமுகை நால்ரோடு சாலையில் அமைந்துள்ள நகை கடை அருகே ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

அச்சமயம் அவ்விடத்தில் ரோந்து சென்ற காவலர்கள் உடனே சென்று பார்த்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நகைக்கடை சுவற்றில் துளையிட முயற்சி செய்தும், ரோந்து காவலர்கள் வரும் சத்தம் கேட்கவே அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக சிறுமுகை காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி நகைக்கடையில் இருந்து நகையை திருட முயற்சித்த சிறுமுகை பகுதி சேர்ந்த ரங்கன் மகன் மூர்த்தி (43) என்பவரை 12 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறுமுகை காவல் நிலைய காவல்துறையினரின் சீர்மிகுந்த பணியை பாராட்டும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை இன்று (29.05.2025) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து அவர்களின் மெச்சத் தகுந்த பணியை பாராட்டு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

மேலும் படிக்க