• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை

March 4, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சூலூரை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சரவணன் (23). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று முடிவு பெற்று, சரவணனுக்கு 15 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண்போலீஸ் ஆனந்தி ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.

மேலும் படிக்க