கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா(வயது 30). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மனைவிகள் 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் மீது கோவையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ஜோஸ்வாவிற்கு ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஜோஸ்வா அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேசி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜோஸ்வா அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கோவையில் இருந்து கடத்தி சென்றார். அந்த சிறுமியை கடத்துவதற்கு ஜோஸ்வாவின் நண்பர் சீனிவாசன் (31) மற்றும் ராசுகுட்டி ஆகியோர் உதவி செய்தனர். இந்த நிலையில் சிறுமியை காணததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது ஜோஸ்வா என்பது தெரியவந்தது. அன்னூரில் பதுங்கி இருந்த ஜோஸ்வாவிடம் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர். பின்னர் இதுதொடர்பாக ஜோஸ்வா, அவருக்கு உதவிய சீனிவாசன், ராசுகுட்டி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், திருமண ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஜோஸ்வா மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த ராசுகுட்டி, சீனிவாசன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்