• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமிக்கு உதவ தன்னுடைய பதக்கங்களை விற்ற கடற்படை வீரர்

August 23, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் முன்னாள் கடற்படை போர் வீரர், தனக்கு கிடைத்த பதக்கங்களை விற்று, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவி செய்துள்ளார்.

அமெரிக்காவில் லோட்டி வுட்ஸ் என்னும் இரண்டு வயது சிறுமி, அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை குறித்து பத்திரிக்கை ஒன்றில் படித்தார்.லோட்டிக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவளுக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டது. அவள் உடம்பிலிருந்த 95 சதவீத புற்றுநோய் கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. புற்றுநோய் மீண்டும் வராமல் இருக்க எடுக்க வேண்டிய சிகிச்சைக்கு சுமார் 2௦௦,௦௦௦ டாலர் தேவைப்பட்டது.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடைய 3 பதக்கங்களை 2௦௦,௦௦௦ டாலருக்கு விற்று அந்த சிறுமிக்கு உதவினார்.எனக்கு கிடைத்த பதக்கங்கள் எந்த பிரயோஜனமும் இல்லாமல் இருந்தது. அதை விற்று, அந்த சிறுமியின் சிகிச்சைக்கு தந்து உதவியது மனதிற்கு நிம்மதியை அளிக்கிறது.

இந்தப் பதக்கங்கள் ஈராக் நாட்டில் நடந்த போரில், அவருடைய சேவையைப் பாராட்டி அமெரிக்க அரசு வழங்கியது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க