• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுத்தைப்புலியுடன் போராடி குழந்தையை மீட்ட தாய்

October 30, 2017 தண்டோராகுழு

மத்திய பிரதேசத்தில் தாய் ஒருவர் சுமார் 30நிமிடம் சிறுத்தைப்புலித்தையுடன்,போராடிகுழந்தையை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேஷ் மாநிலத்தின் மோர்னா மாவட்டத்திலுள்ள பைசாய் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா(25 ). அவர் கடந்த வெள்ளிக்கிழமை(அக்டோபர் 27)தனது 2 வயது மகளுடன், அடர்ந்த காடு வழியாக,அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சிறுத்தைப்புலி ஒன்று புதருக்குள் இருந்து பாய்ந்து வந்து, ஆஷாவை கீழே தள்ளியது. சுதாரித்துக்கொண்ட ஆஷா, தரையிலிருந்து எழுந்து, தனது 2 வயது மகளுடன் ஓட முயன்றார். ஆனால், அந்த சிறுத்தைப்புலி, அவருடைய மகளை கவ்வி இழுத்துச் செல்ல முயன்றது.உடனே அவர், அந்த சிறுத்தைப்புலியின் கழுத்தை இறுகப்பிடித்துக் கொண்டு, சுமார் 30 நிமிடங்கள் அதனுடன் போராடினார்.

அந்த சிறுத்தைப்புலி, அதனுடைய கூர்மையான நகங்களால் ஆஷாவின் கை, மற்றும் கழுத்து பகுதிகளில்கீறி, ஆழமான காயங்களை ஏற்படுத்தியது.இருப்பினும், அதனுடைய கழுத்து பகுதியில் பிடித்துக்கொண்டு, அருகிலிருந்த ஒரு கட்டையை எடுத்து, அதை ஓங்கி அடித்துள்ளார். இதற்கிடையே, அந்த காட்டுப்பகுதிக்கு அருகே உள்ள வயலில், வேலை செய்து கொண்டிருந்தவர்கள்,அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து, அந்த சிறுத்தைப்புலியை தாக்கினர், அந்த சிறுத்தைப்புலி அங்கிருந்து ஓடிவிட்டது.

இதையடுத்து,பலத்த காயமடைந்த ஆஷாவையும், அவரது மகளையும் உதவிக்கு வந்தவர்கள், அருகிலிருந்த சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள், இருவருக்கும் சிகிச்சை அளித்தனர். ஆனால், ஆஷாவின் கழுத்து, மற்றும் கையில் ஏற்பட்ட காயங்கள் ஆழமாக இருந்ததால், அவரை மோர்னாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தன் குழந்தையை மீட்க தாய் சுமார் 30நிமிடம் சிறுத்தைப்புலித்தையுடன், போராடிசம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க