• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறு,குறு தொழில் சார்ந்த கடைகள் இயங்க அனுமதிக்க கோரிக்கை

June 14, 2021 தண்டோரா குழு

முழு ஊரடங்கு இருந்தாலும் சிறு,குறு தொழில்களும், தொழில் சார்ந்த கடைகளும் இயங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு போசியா தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து போசியா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு காலத்தில் அத்யாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தகை தொழில்களுக்கு உதிரிபாகங்கள் அல்லது பிற வேலைகள் செய்யும் சிறு,குறு தொழில்கள் இயங்க அனுமதி இருந்தாலும், வேலைக்கான கருவிகள், இடுபொருட்கள், விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளதாலும், தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டதாலும் சிறு,குறு தொழில்கள் செயல்பட முடியவில்லை.தற்போது நடைமுறையில் ஊரடங்கு காலத்தில் அனைத்து பெரிய தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.

99 சதவீதம் சிறு,குறு தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் தொழிற்சாலைகள் மூடப்படவில்லை.இதனால் கோவையில் உள்ள மோட்டார், பம்புசெட், கம்ப்ரசர்கள்,ரயில்வே சாதனங்கள், முழு உபகரணங்களை செய்யும் குறு தொழிற்சாலைகள் சந்தையை இழப்பது அதிகரிக்கும்.தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின் தள்ளப்படும்.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பின்போது எவ்வித கடனுதவியும் பெறாத சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு தற்போது வரை எந்த ஒரு உதவி திட்டமும் அறிவிக்கப்படவில்லை. 20 சதவீத தொகையை புதிய கடனாக பெற்ற நிறுவனங்கள் மூலப்பொருட்களின் விலை உயர்வால் சிக்கி தவிக்கின்றன. சிறு,குறு தொழில்களால் கடந்த 2 ஆண்டுகளாக விரிவாக்கம் செய்யவோ அல்லது நலிவிலிருந்து மீளமோ முடியவில்லை.அரசிடமிருந்து சிறு,குறு தொழில்களுக்கு உதவி இல்லாதபோது எங்களை நம்பியுள்ள, அவற்றை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலை பணிகள் நிறுத்தப்படுவதால் வேலை தொடர்ச்சி பாதிக்கப்படுகிறது. தொழில் முனைவோர்களுக்கு தொழில் செய்வதற்கான உத்வேகமும், நம்பிக்கையும் போய் விடுகிறது.
சிறு,குறு தொழில்களுக்கு புதிய நிதி உதவி திட்டத்தை அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் தமிழக அரசு, முழு ஊரடங்கு இருந்தாலும் சிறுகுறு தொழில்களும், தொழில் சார்ந்த கடைகளும் இயங்க அனுமதிக்க வேண்டும்.

சிறு, குறு தொழில் சார்ந்த பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தொழில் அமைப்புகள் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்தால் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுவரை எவ்வித கடனுதவியும் பெறாத சிறு,குறு தொழில்களுக்கு தனிப்பட்ட திட்டத்தை அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதுவரை கடன் பெறாத நிறுவனங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ஒரு ஆண்டு வட்டி ஏதுமில்லாமல் வழங்கப்பட வேண்டும். நடப்பு கடன் தவணைகளை குறைந்தது 6 மாத காலம் தள்ளி போட வேண்டும்.

ரிசர்வ் வங்கி தற்போது இ.சி.எல்.ஜி.எஸ் திட்டத்தில் மேலும் 10 சதவீத அளவுக்கு புதிய கடன் தொகை வழங்க வங்கிகளுக்கு சிபாரிசு செய்துள்ளது. அதற்கு போதிய நிதியை ரிசர்வ் வங்கி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 மாதங்களுக்கு மின் கட்டணத்திலிருந்து சிறு,குறு தொழில்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க