• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலுக்கு நோட்டீஸ்

January 8, 2019

சிம்பு தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்பு மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கிடையில், படத்தின் இயக்குநர் தொடர்ந்து சிம்பு மீது பல்வேறு விமர்சனம் செய்தும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தும் இருந்தார்.

இதையடுத்து, நடிகர் சிம்பு தன்னை பற்றி தவறாக மைக்கேல் ராயப்பன் பேட்டி கொடுப்பதாகவும்,தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் ராயப்பன்தனக்கு கோடிக்கணக்கில் சம்பள பணம் தர வேண்டியுள்ளது எனவும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் ஜன.18க்குள் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்,தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க