• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிபிஐ எதிர்ப்பு நீதிபதி அனுமதி நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதங்கள்

August 22, 2019 தண்டோரா குழு

ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடந்தது.

இதற்கிடையில், இன்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல், ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில், சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதற்காக சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். சிதம்பரம் சார்பில், கபில்சிபல், அபிஷேக் சிங்வியும், சிபிஐ சார்பில் துஷார் மேத்தாவும் ஆஜரானார்கள். சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது,சிதம்பரத்திற்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது, அவருக்கான வாரண்டு பிறப்பிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நாங்கள் அவரை ஆஜர்படுத்தி இருக்கிறோம். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்.அமைதியாக இருப்பது அரசியல் சாசன உரிமை , ஆனால் சிதம்பரம் அமைதியாக இருந்து அனைத்து கேள்விகளையும் தவிர்த்து வருகிறார் ; அந்த கேள்விகளுக்கு அவர் மட்டுமே பதிலளிக்க முடியும். பண மோசடிக்கு இது சரியான முன் உதாரண வழக்கு என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தர மறுக்கிறார் சிதம்பரம்.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் சிடி எனப்படும் வழக்கு விபரங்களை பதிவு செய்கிறோம். காவலில் இருக்கும் போது தான் சில கேள்விகளுக்கு பதிலை பெற முடியும். அதனால் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ வழக்கறிஞர் துஷர் மேத்தா திட்டவட்டமான வாதாடினார்.

ப.சிதம்பரம் சார்பில் கபில் சிபல் வாதத்தை தொடங்கினார். அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் ஜாமினில் உள்ளார்.மற்றொருவரான பட்டய கணக்காளர் பாஸ்கரன் முன் ஜாமின் பெற்றுள்ளார். ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள். 2017-ல் வழக்கு பதிவு செய்த போது சிதம்பரத்திடம் விசாரித்திருக்கலாம் 2018-ல் விசாரணைக்கு அழைத்த போது கூட விசாரித்திருக்கலாம் ஆனால் எதையுமே செய்யவில்லை. விசாரிக்கும் தேவை இருந்தால் மீண்டும் அழைத்திருக்கலாம் சி.பி.ஐ. அழைப்பை சிதம்பரம் ஒருபோதும் நிராகரித்ததில்லை. வழக்கில் விசாரணை ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால் சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேற்று இரவு விசாரிக்க வேண்டுமென சி.பி.ஐ சொன்னது , ஆனால் 12 கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளார்கள், இப்போதும் கூட விசாரிக்க வேண்டுமென சொல்கிறார்கள் ஆனால் அவர்களிடம் கேள்விகளே இல்லை. இதெல்லாம் நடந்துள்ளது என சி.பி.ஐ கூறுவதெல்லாம் சத்திய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது அல்ல, 2018 ஜூன் மாதம் நடந்த விசாரணை புத்தகத்தை சமர்ப்பியுங்கள், ஒத்துழைப்பு தந்தாரா இல்லையா என பார்க்கலாம். நேற்று சி.பி.ஐ சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

ப. சிதம்பரம் : நான் பேச வேண்டும்

தன் மீதான வழக்கில் தன் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க அனுமதி கேட்டார் ப.சிதம்பரம்

துஷர் மேத்தா : குற்றம் சாட்டப்பட்டவர் பேசக் கூடாது.

அபிஷேக் மனு சிங்வி : குற்றம் சாட்டப்பட்டவர் பேசலாம், நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

((துஷர் மேத்தா, அபிஷேக் மனு சிங்வி இடையே வாக்குவாதம்))

துஷர் மேத்தா : சிதம்பரம் சாதாரண மனிதர் அல்ல.. அவர் படித்தவர்.. சட்டம் அறிந்தவர். .பதில் சொல்லாமல் தட்டிக் கழிப்பது எப்படி என அவருக்கு தெரியும்.கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சிதம்பரம் ஒன்றும் சாதாரணமானவர் இல்லை ; எந்த கேள்விகளுக்கும் பதில் தராமல் இருக்கும் வலிமை படைத்த ஒருவர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.காவலில் எடுத்து விசாரிக்க கோருவது எங்கள் உரிமை, அதற்கான தேவையும் உள்ளது. சிதம்பரத்தை சுற்றியிருக்கும் பாதுகாப்பு வளையத்தை நீக்காமல், எங்களால் உண்மையை நெருங்க முடியாது.குற்றத்தின் தன்மையை உணர்ந்து,முன் ஜாமினை மறுத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதுதான் அந்த பாதுகாப்பு வளையம் உடைந்தது. விசாரிப்பது எங்கள் உரிமை, அதனை யாரும் மறுக்க முடியாது முன்னாள் அமைச்சர் என்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ சிதம்பரத்திற்கு சலுகைகள் வழங்க முடியாது.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதில் சிபிஐ உறுதியாக உள்ளது. தப்பிச் செல்வார் என்பதெல்லாம் இங்கு தேவையற்ற ஒன்று ; நாங்கள் நிபுணர்களோடு போராடிக் கொண்டிருக்கிறோம் , சரியான வழியை கண்டறியாவிட்டால் தோற்று விடுவோம்.

கபில் சிபல் : கேள்விகளை சி.பி.ஐ பொதுவாக வெளியிட வேண்டாம் ஆனால் அந்த கேள்விகளில் உண்மை இருக்க வேண்டும் எனவே விரும்புகிறோம்.

((சிதம்பரத்தை பேச அனுமதிக்குமாறு கபில் சிபில் நீதிபதியிடம் கோரிக்கை .சிதம்பரம் பேச அனுமதி))

((நீதிமன்றத்தில் தன் தரப்பு மீதான வாதத்தை துவக்கினார் சிதம்பரம்)).

ப.சிதம்பரம் : ஜூன் 6, 2018-ல் விசாரணை நடத்தினார்கள். அதனை வரவழையுங்கள். எந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை என பாருங்கள். வெளிநாட்டு வங்கிகளில் எனக்கு கணக்கு இல்லை.. மகனுக்கு மட்டுமே கணக்குகள் உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி சிபிஐ கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன்.

((சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கும் மனு மீதான தீர்ப்பு 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு))

வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சிதம்பரத்துக்கு ஜாமின் கோரும் மனு மீதும், சிபிஐயின் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் மனு மீதும் நீதிபதி 30 நிமிடத்தில் தீர்ப்பு வழங்க இருக்கிறார்.

மேலும் படிக்க