• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்இ 1௦ வகுப்பு தேர்வில் 99.8 சதவீதம் பெற்ற மாணவி

June 8, 2017 தண்டோரா குழு

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சிபிஎஸ்இ 1௦ வகுப்பு தேர்வில் 99.8 சதவீதம் பெற்று சலோனி என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள கேத் நகரில் சலோனி(15) என்ற மாணவி நடந்து முடிந்த சிபிஎஸ்இ 1௦ வகுப்பு தேர்வில் 99.8 சதவீதம் வெற்றிப்பெற்றுள்ளார். அவருடைய பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள். அங்குள்ள மக்கள் அவருக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சலோனி கூறுகையில்,

“சிபிஎஸ்இ 1௦ வகுப்பு தேர்வில் 99.8 சதவீதம் பெற்று வெற்றிப்பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. கணிதம் மற்றும் மராத்தி மொழி பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவேன் என்று எதிர்ப்பார்தேன். ஆனால் சமுக அறிவியல் மற்றும் அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் கிடைத்து ஆச்சரியமாக இருக்கிறது.

எனக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடம் மிகவும் பிடிக்கும். என்னுடைய பெற்றோர்கள் மருத்துவர்களாக இருப்பதால், எனக்கு அந்த இரு பாடத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. ஆங்கில பாடத்தில் ஒரு மார்க் குறைந்ததால் 1௦௦ சதவீதம் பெறமுடியவில்லை. எந்த பாடத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. மேலும், சிறிய நகரத்தின் வசிப்பதால், சில நேரங்களில், சில காரியங்களை குறித்த தெளிவான வெளிப்பாடுகள் எனக்கு கிடைக்கவில்லை. எனவே, சில அனுபவங்களை பெற காத்திருக்கிறேன்.

பாடங்களை முறைப்படுத்தி படித்தது தான் என் வெற்றிக்கு காரணம். தேர்வு தொடங்கும் மூன்று மாதங்களுக்கு முன், பள்ளியின் நடைபெற்ற தேர்வின் வினாத்தாள் மற்றும் இதற்கு முன் நடந்த தேர்வின் வினாத்தாள்களை படிக்க தொடங்கினேன். பள்ளியிலிருந்த பலத்த போட்டி, தேர்வின் என்னை சிறப்பாக செய்ய உதவியது” என்று கூறினார்.

“நாங்கள் எதிர்ப்பார்த்ததற்கும் மேலாக சலோனி நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. அவள் ஒரு சிறந்த மாணவியாக விளங்கினாள்” என்று சலோமியின் தந்தை டாக்டர் அனில் ஜோஷி தெரிவித்தார்.

மேலும் படிக்க