• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்திய அளவில் மூன்றாமிடம் பிடித்த கோவை மாணவி

May 6, 2019 தண்டோரா குழு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் கோவையைச் சேர்ந்த காவிய வர்ஷினி என்ற மாணவி 497 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

பத்தாம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் கோவை புளியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி மாணவி காவிய வர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ள இந்த மாணவி தமிழில் 99 ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

பீளமேடு பகுதியை சேர்ந்த விவசாயி பாபுவின் மகளான இவர் பள்ளியில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோரும் தனது படிப்பிற்கு ஊக்கம் தந்ததாகவும் அன்றைய பாடத்தை அன்றே படித்ததாலும் புரிந்து படித்ததாலும் தன்னால் இந்த சாதனையை எட்ட முடிந்ததாக கூறியுள்ளார். மேலும்,பள்ளியிலும் மாவட்டத்திலும் மாநிலத்திலும் முதலிடத்தையும் தேசிய அலவில் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ள காவியவர்ஷினி எதிர்காலத்தில் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து ஆன்காலஜி துறையில் பயில இருப்பதாகவும் யுபிஎஸ்இ தேர்வெழுதி ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க