• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சின்னத்தம்பி யானை வாழவிடுங்கள் கோவையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 4, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் சின்னத்தம்பி யானை பாதுக்கவும் அதை அதன் வாழ்விடத்தில் சேர்க்க வலியுறுத்தி இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் சின்னத்தம்பி பாதுகாப்பு குழு சார்பாக சின்னத்தம்பியானை படத்துடன் சூழல் ஆர்வலர்கள் மனு அளித்தனர்.

இது குறித்து சின்னத்தம்பி பாதுகாப்பு குழு ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் கூறுகையில்,

கோவை மாவட்ட வன பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கணிமவள கொள்ளையர்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் காடு செழிக்க யானைகள் அவசியம் அதன் வாழவிடம் பாதுக்கபடவேண்டும் அந்த வகையில் மனிதர்களை தொந்தரவு செய்யாத சின்னத்தம்பி யானையினை மறுபடியும் அதன் குடும்பத்துடன் சேர்க்கவேண்டும். அதனால் குமிக்கி யானையாக மாற்ற கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மனு அளிக்கிறோம்.

மேலும் அவசர வழக்காக இதை விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.மலைகள் முதல் மனிதர்கள் வாழ்வுக்கு யானைகள் ஆதரம் போன்ற வாசகங்களுடன் மனு அளிக்கவந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் படிக்க