• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சின்னதம்பியை கும்கியாக மாற்ற மாட்டோம் – தமிழக அரசு உத்தரவாதம்

February 4, 2019 தண்டோரா குழு

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது அனைவராலும் பேசப்படுவது சின்னத்தம்பி யானையை பற்றி தான்.சமூக வலைத்தளங்களில் சின்னத்தம்பி ட்ரெண்டாகி வருகிறது . கோவை தடாகம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சின்னத்தம்பி யானை வருவதாக கூறி விவாசயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து, கடந்த 25ம் தேதி சின்னத்தம்பி யானை வனத்துறையால் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

இதற்கிடையில்,காட்டுக்குள் அனுப்பப்பட்ட சின்னத்தம்பி மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் அந்த யானை கும்கியாக மாற்றப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன
உயிரின ஆர்வலர் அருண் பிரசன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சின்னதம்பி யானையை பிடித்து கும்கி யானையாக மாற்ற தடை விதிக்க வேண்டும்.யானை – மனிதர்களுக்கு இடையில் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் ஊருக்குள் நுழையும் யானைகளை பிடித்து, வனப்பகுதிக்குள் விடுவதற்கு மாற்று வழிகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும்.யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணிக்க தனி குழு அமைக்க வேண்டும்… ஊருக்குள் நுழையும் யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிகளில் விடுவதற்கு தகுந்த விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஏற்கனவே மதுக்கரை மகாராஜா என்ற யானையை பிடித்து கும்கியாக மாற்றும் போது அது இறந்து விட்டது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர், அரசு தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் அரசுக்கோ வனத்துறைக்கோ தற்போது கிடையாது.தற்போது அமராவதியில் நடமாடும் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப இரு கும்கி யானைகளும், யானைகள் நிபுணர் அஜய் தேசாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர் என்றார்.

தலைமை வனப் பாதுகாவலர் தரப்பில் கூறும்போது,

இதுவரை யானையை பிடித்து கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை எல்லா யானைகளையும் கும்கி யானைகளாக மாற்ற முடியாது. முதலில் முதுமலை வனப்பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டோம். சிறைபிடிப்பது கடைசி வாய்ப்பாக பயன்படுத்துவோம். . வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துவருகிறோம். இரு யானைகள் குட்டியுடன் வந்தன. அவற்றை திருப்பி அனுப்பிய போது, சின்னத்தம்பி யானை மட்டும் திரும்பி ஊருக்கு வந்து விட்டது. மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. கும்கி யாக மாற்ற பல பயிற்சிகள் வழங்கப்படும் என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள்,

அமைச்சர் கருத்து செய்தியாக வந்துள்ளது.சின்னதம்பி ஜெ சி பி இயந்திரத்தின் மூலம் லாரியில் ஏற்றும் போது காயமடைந்தது வருத்தம் அளிக்கிறது.. இந்த விவகாரத்தில் நிபுணர்களின் கரும்தை தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் வழக்கு விசாரணை அடுத்த திங்களுக்கு தள்ளிவைப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க