• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சினிமா நடிகர்களை தவிர நல்லவர்கள் அனைவரையும் சேர்த்துக்கொள்வேன்

October 10, 2020 தண்டோரா குழு

சினிமா நடிகர்களை தவிர கட்சிப்பாகுபாடின்றி நல்லவர்கள் அனைவரையும் சேர்த்துக்கொள்வேன் என டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்

நல்லாட்சி இயக்கம் சார்பில் ஒருகோடி வாக்காளர்களை சந்தித்து டிராபிக் ராமசாமி ஆதரவு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி வருகிறார். இதன் ஒருபகுதியாக கோவை சாய்பாபாகாலணி பகுதியில் வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த டிராபிக் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

நல்லாட்சி இயக்கம் சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் நல்லவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.ஒருகோடி மக்களை சந்த்துள்ளதாகவும் இன்று முதல் கோவையிலிருந்து பிரச்சாரத்தை துவக்கி உள்ளதாவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் இனி சூரியன்,இரட்டை இலை,தாமரை மறுத்து நல்லவர்களுக்கு வாக்களித்தால் மக்களுக்கு நல்லது எனவும் ஊழல் செய்பவர்களுக்கு வாக்களிக்காமல், சுயேட்சையாக போட்டியிடும் நல்லவர்களை பார்த்து தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நல்லாட்சி இயக்கம் சார்பில் நல்ல வாக்காளர்கள் நிறுத்தப்படுவார்கள் என கூறிய டிராபிக் ராமசாமி அதற்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் இயக்கமாக மக்களாட்சி அமையும் எனவும் நல்லவர்கள் ஆட்சி செய்யும் நாள் விரைவில் ஏற்படும் என நம்புவதாக தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் கையில்தான் உள்ளது எனவும் வீண் செலவுகள் குறைக்கப்பட்டும் என உறுதியளிப்பதாகவும் என்னால் கைகாட்டப்பட்டும் வேட்பாளர்கள் மக்களின் வாக்குக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள் என தான் உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்த அவர் பேனர் கலாச்சாராத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாவும் இனியும் தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்த அவர்,வைக்கப்படும் பேனர்கள் அனைத்தும் குப்பை தொட்டக்குத்தான் செல்கிறது என தெரிவித்தார். சினிமா நடிகர்களை தவிர கட்சிபாகுபாடின்றி நல்லவர்கள் யார் வந்தாலும் சேர்துக்கொள்ளப்படுவார்கள் என கூறிய அவர் இதுவரை சினிமாக்கார்ர்களை நம்பி மக்கள் ஏமாந்த்து போதும் எனவும் நடிகர்களால் நாட்டைக்காப்பாற்ற முடியாது எனவும் தெரிவித்தார் .

மேலும் படிக்க