• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிட்பண்ட்டில் கட்டிய பணத்தை திருப்பி தராததால் பயனாளிகள் திடீர் சாலை மறியல்

July 31, 2019 தண்டோரா குழு

கோவையில் சிட்பண்ட்டில் கட்டிய பணத்தை திருப்பி தராததால் ஆத்திரமடைந்த பயனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை 100 அடி சாலையில் உள்ளது தோட்டத்தில் சிட்பண்ட் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பயனாளிகள் பணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு பயனாளியும் கட்டிய பணத்தில் பாதியை மட்டுமே கணக்காக பதிவு செய்து மீதி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாங்கள் செலுத்திய பணத்தை திருப்பித் தரக் கோரி பல மாதங்களாக பயனாளிகள் கேட்டு வந்தாலும் பணத்தை திருப்பித் தருவதாக தொடர்ந்து கூறி வந்த சிட் பண்ட் நிறுவனம் இதுவரை யாருக்கும் பணத்தை வழங்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து கோவை பி3 காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. சிட் பண்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ் பாபுவை இதுவரை காவல்துறை முறையான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதுவரை பயனாளிகள் அனைவரிடமிருந்தும் பெற்ற பணத்தில் 50 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்த நிறுவனத்தால் ஆத்திரமடைந்த பயனாளிகள் கோவை 100 அடி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காந்திபுரம் காவல்துறையினர் பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி பயனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் பணத்தை திருப்பி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப நாட்களாக சிட் பண்ட் மோசடி விவகாரம் கோவையில் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க