• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிட்டுக்குருவியும் ஜனநாயக இந்தியாவும் !

January 26, 2022 பா. ஸ்ருதி

இன்று குடியரசு தினம் – இந்நாள் சுதந்திர மற்றும் தனிப்பட்ட இந்தியாவின் உணர்வை நினைவு கூறுகிறது. 73 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாள் தான், நாம் இன்று, சிறகடித்து சுதந்திரமாய் பறக்க அடிக்கல் நாட்டியது.

இந்திய பிரஜைகளின் இந்த ஆசையை தான் அன்றே உணர்ந்து எழுதினாரோ அந்த மகாகவி “விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே.” என்று உலக இளைஞர்கள் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியை இந்தியா கொண்டுள்ளது. இந்த மகத்தான சக்தியை நல் வழியில் வழி நடத்தி வெல்வது, நாம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

சிட்டுக் குருவியைப் போல சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் நம் நாட்டின் இளைஞர்களுக்கு நம் தேசம் சேர்த்து வைத்திருக்கும் மாபெரும் சொத்து ஜனநாயகம்.சிட்டுக்குருவியை உற்பத்தித்திறன், ஒத்துழைப்பு மற்றும் குழு பனியன் ஒரு குறியீடாக நாம் காண்கிறோம். அதேபோலத்தான் நமது நாட்டின் ஜனநாயகமும். ஜனநாயகத்தின் பெருமையை ஒற்றுமை தானே?

எவ்வாறு ஒரு சிட்டுக்குருவியின் பாடல் சத்தத்தில் நாம் இனிமை காண்கிறோம் என்று அதற்கு தெரியாதோ, அதே போல தான் நம் ஜனநாயகமும். தன்நலம் அற்று நம் தேசத்தின் வளர்ச்சிக்கு பாதை அமைகிறது.ஜனநாயகம் என்பது நாம் பிரதிநிதிகளுக்கு வாக்கு செலுத்துவது மட்டுமல்ல. இந்த தேசத்தை முன்நேற்ற பாதையில் கொண்டு செல்வது நம் ஒவ்வொரு உடைய பங்கும் தேவை என நினைவுகூறுகிறது.

ஜனநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் விசேஷத்தை நம்நாட்டின் தூன்கலான இளைஞர்களுக்கு கற்று கொடுப்பது அவசியம். ஜனநாயகம் பற்றிய கல்வி இந்த குடியரசை தக்கவைக்க மிகவும் தேவை. ஒவ்வொரு இந்திய மக்களும், அடிப்படை இந்திய கட்டமைப்பு ஜனநாயகம் பற்றி தெரிந்திருப்பது அவசியம்.

வடகொரியா, சீனா போன்ற நாடுகளில் தாயகத்தை ஒதுக்கி வைத்ததால் என்ன ஆயிற்று என நாம் அறிவோம். பண்டைய இந்தியா முதல் இன்று வரை. ரிக் வேதம் முதல் டிஜிட்டல் இந்தியா வரை, நாம் ஜனநாயகத்தை போற்றி பாதுகாத்து இருக்கிறோம். சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் ஜனநாயகத்தின் வேர் அசையவில்லை. நம் தேசத்தின் ஊன்றுகோல்.

” தேசத்தின் பாதுகாப்பிற்கு எந்த அளவு முக்கியத்துவம் ஒரு நாடு தருகிறதோ அதே போல, தனி மனித உணர்ச்சி, சிந்தனை, சந்தோஷம், துக்கம் என எல்லாவற்றுக்கும் ஒரு ஜனநாயகன் நாடு முக்கியத்துவம் அழிக்கிறது. ஜனநாயக நாட்டில் நாம் இருப்பது செய்த பாக்கியம் மற்றும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். ஜனநாயகம் அற்று இந்தியாவின் நிலை பற்றி சிந்தனை கூட வரவில்லை. ஒரு இந்தியனும் ஜனநாயகத்தை மதித்து வணங்குவது அவசியம். ” ரா. நந்தினி, ஊடகவியல் மாணவி.

எவ்வாறு ஒரு சிட்டுக்குருவியால் மணிக்கு 24 மயில்கள் வேகத்தில் பறக்க முடியுமோ, ஜனதாயகம் காக்கும் நாடு விரைவாக வளர்ச்சியடைய முடியும். அதற்கு, ஜனநாயகத்தின் தன்மை மாறாமல், சுயநலம், தனி மனித பேர்ஆசைக்காக அதை சீர்குறைக்காமல் போற்றி பாத்துக்காப்பது அவசியம்.

மேலும் படிக்க