September 27, 2017
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் ஹவுசிங்யூனிட் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்களை உடனடியாக காலிசெய்யச் சொல்லி வட்டாட்சியர்,ஆர்.டி.ஓ. மற்றும் துணை வட்டாட்சியர் ஆகியோர் போலீஸ் துணையுடன் நோட்டீஸ் கொடுத்தனர்.
இதனிடையே நோட்டீசை வாங்க மறுத்த மக்கள் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சிங்காநல்லூர்எம்.எல்.ஏ.நா.கார்த்திக் நேரில் சென்று அங்கு வசிக்கும் மக்களுக்கு,அதே இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் வரை பாதுகாப்பான மாற்று இடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து நா.கார்த்திக் கூறுகையில்,
” மனிதாபிமான அடிப்படையில் அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும். மக்கள் உடனடியாக வீடுகளை எவ்வாறு காலி செய்ய முடியும், அவர்களுக்கு அதிகாரிகள் சரவணம்பட்டி அல்லது உக்கடம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய வீடுகளை ஒதுக்கி தர வேண்டும்,” என்றார்.