• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்காநல்லூர் பஸ் நிலையத்தின் முன்பு மரக்கன்றுகள் நட்ட பாஜகவினர்

September 21, 2019 தண்டோரா குழு

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் சார்பாக சிங்காநல்லூர் பஸ் நிலையத்தின் முன் மரக்கன்றுகள் நடப்பட்டது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வார காலமாக நாடு முழுவதும் பாஜகவின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் ஏழை எளிய குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இதேபோல் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட இதர பிறப்படுத்தப்பட்டோர் அணியின் சார்பாக சிங்காநல்லூர் பஸ் நிலையத்தின் முன் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இக்கன்றுகளை அங்கு இருக்கும் கடையின் உரிமையாளர்கள் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் பஸ் நிலைய தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஓபிசியின் தலைவர் உதயகுமார், துணை தலைவர் பரிசோத்,செந்தில், பொது செயலாளர் இளங்கோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க