• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிக்கன் வாங்க பாதி வழியில் ஹெலிக்காப்டரை தரையிறக்கிய பைலட் !!!

May 16, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் மெக்டொனல்ட் உணவகத்திற்கு முன் சிக்கன் வாங்க அனுமதியின்றி ஹெலிக்காப்டரை தரை இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த பைலட் ஒருவர் ஹெலிகாப்டரில் பறந்துக்கொண்டிருக்கும் போது பசி ஏற்பட்டதால், உணவு பார்சல் பெற்றுக்கொள்ள சிட்னியின் ரௌஸ் ஹில் என்னும் இடத்திலுள்ள மெக்டொனல்ட் உணவகத்தின் முன் ஹெலிக்கொப்டரை தரை இறக்கியுள்ளார்.

ரௌஸ் ஹில் பகுதியில் வசிக்கும் குடியிருப்பவர்கள் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதியின்றி தரையிறங்கியதையும், பைலட் எந்த பரபரப்புமின்றி உணவகத்தை நோக்கி சென்று உணவு பார்சல் வாங்கிகொண்டு சாதாரணமாக புறப்பட்டு சென்றதையும் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் கூறுகையில், “அந்த இடத்தின் உரிமையாளரிடம் முன் அனுமதி பெற்றுக்கொண்டு, ஹெலிகாப்டர் தரை இறங்கியிருந்தால், அது எங்கள் ஆணைய சட்டத்திற்கு எதிரானது அல்ல” என்று தெரிவித்தது.

“ஹெலிகாப்டரை தரையிறங்க முன் அனுமதி பெற்ற பிறகு தான், தரை இறக்கினேன்” என்று அந்த ஹெலிகாப்டர் பைலட் கூறினார்.

மேலும் படிக்க