• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிகை அலங்காரத்திற்கு என ஒரு தினம்.

May 2, 2016 தண்டோரா குழு

சிகை அலங்கார கலை பல நுற்றாண்டுகளாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. காலத்திற்கு ஏற்ப சிகை அலங்காரம் மாறிக்கொண்டே வந்தாலும் அதனுடைய உபயோகத்தை வேண்டாம் என்று சொல்பவர் யாரும் இல்லை.

பெரியவர் முதல் சிறியவர் வரை வித விதமான சிகை அலங்காரம் செய்து கொள்ள அதிகம் விரும்புவர். இந்தக் கலை நேற்றோ அல்லது இன்றோ தோன்றியது அல்ல மாறாகப் பல நூற்றாண்டுகளாக இந்தக் கலையை ஆண்களும் பெண்களும் கடைப்பிடித்து வந்து உள்ளனர்.

குறிப்பாகப் பல மன்னர்கள் மற்றும் அரசிகள் அவர்களது சிகை அலங்காரத்திற்காகவே நினைவில் நின்றுள்ளார்கள்.

மேலும் உலகை மிரள வைத்த பல போர் வீரர்கள் மற்றும் கொடுங்கோலர்களும் தங்களது மீசை மற்றும் சிகை அலங்காரத்தால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 30ம் தேதியைச் சிகை அலங்கார தினமாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்து வகை சிகை அலங்காரங்களின் தனித்துவத்தையும், இதை நுட்பமாகச் செய்பவர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்னும் நோக்கத்திற்காகவும், இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

சிகை அலங்காரம் செய்து கொள்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அலங்காரம் சரியாக அமையாது.

அதனால் அவர்களுடைய முடியின் தன்மை, முகத்தின் வடிவு, மருத்துவ ஆலோசனை ஆகியவற்றை அறிந்து கொள்வது அவர்களுக்கு அவசியமானது.

சிகை அலங்காரம் செய்பவர்கள் வாடிக்கையாளரின் நிறம், உடல் வாகு, உயரம், அவர்களுடைய எதிர்பார்ப்புகள், ஆகியவற்றைக் கொண்டு அழகியல் பரிசீலனைகளை தருகிறார்கள்.

அவர்களுக்கு எந்த வகை சிகை அலங்காரம் சரியாக அமையும் என்பதைப் பார்த்த பின்னர், அழகாகச் செய்து விடுகின்றனர்.

தற்போது திருமண விழாக்களில், மணப்பெண்ணுக்குச் செய்யப்படும் சிகை அலங்காரம் முக்கிய பங்கை வகிக்கிறது.

எந்தச் சிகை அலங்காரம் அந்தப் பெண்ணுக்கு ஏற்றதாக இருக்கும் என்று முன்பதாகவே அறிந்துகொண்டு திருமணத்திற்கு வருபவர்கள் கண்களை கவரும் படி செய்து விடுகின்றனர்.

இந்த அற்புதக்கலை பல்வேறு வகையில் வளர்ந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் பல புதிய அறிவியல் நுட்பங்களைக் கையாண்டு புதிய சாதனையை படித்துக்கொண்டு இருக்கிறது என்று யாராலும் மறுக்க முடியாது என்பது உண்மையே.

மேலும் படிக்க