April 22, 2020
தண்டோரா குழு
ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை விமான நிலையத்திலிருந்து கர்நாடாக மாநிலம் மங்களூருக்கு மேல் சிகிச்சைக்காக கர்நாடக தொழிலதிபர் அழைத்து செல்லப்பட்டார்.
கோவை தனியார் மருத்துவமனையில் இரு மாதங்களாக வாத நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடகவைச் சேர்ந்த தொழிலதிபர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக செல்ல முடியாமல் இருந்துள்ளார்.இந்நிலையில் மத்திய அரசு மூன்று நாட்களுக்கு முன்பு அவசர சிகிச்சைககாக நோயாளிகளை ஏர் ஆம்புலென்ஸ் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று கொண்டு செல்லலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தொழிலதிபர் சார்பில் மாவட்ட ஆசியருக்கு ஏர் ஆம்புலென்ஸ் சேவையை பயன்படுத்த அனுமதி வேண்டி மனு கொடுத்தனர்.நோயாளின் மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் அவரது மேல் சிகிச்சைகாக ஏர் ஆம்புலென்ஸ் மூலம் மங்களூர் செல்வதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி அனுமதி அளித்தார். இதனையடுத்து நேற்று மாலை டெல்லியிலிருந்து வந்த ஏர் ஆம்புலென்ஸ் , கோவை விமான நிலையத்தில் இருந்து மங்களுக்கு தொழிலதிபர் அழைத்துச் செல்லப்பட்டார்.கொரோனா தொற்று காலத்தில் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் தமிழகத்தில் முதல் முறையாக கோவையிலிருந்து பயன்படுத்தபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.