February 27, 2021
தண்டோரா குழு
1872ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்ட சிஎஸ்ஐ சகல ஆன்மாக்கள் ஆலயத்தின் 150-வது ஆண்டு விழா தேவாலய வளாகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சி எஸ் ஐ ஆல்சோல்ஸ் தேவாலயத்தின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு 150 பலூன்கள் மற்றும் புறாக்கள் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து 150 வேப்ப மரக் கன்றுகள் திருமண்டல சுற்றுச்சூழல் குழுவிற்கு வழங்கப்பட்டது.
இந்த விழா குறித்து தேவாலயத்தின் தலைவர் அருட்திரு சார்லஸ் சாம்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆலயத்தின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மார்ச் 20ஆம் தேதி 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், ஏப்ரல் 24ஆம் தேதி 3 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மே 1ஆம் தேதி 150 பல்வேறு தொழிலாளர்கள் கௌரவிக்க படுகின்றனர்.
தொடர்ந்து. இதனை தொடர்ந்து மே 9-ஆம் தேதி அன்னையர் தினமும்,ஜூன் மாதம் 20ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாட உள்ளோம்.150 கார்கள் பங்கேற்கும் சிறப்பு கார் ரேலி, ஆகஸ்ட் 26ஆம் தேதி 5 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட வாக்கத்தான் போட்டியும், நவம்பர் 20ஆம் தேதி பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி மூலம் பெறப்படும் தொகை மூலம் ஐஏஎஸ் பயிற்சி மேற்கொள்ளும் 150 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 27 ஆம் தேதி 150 முதியோர்களுக்கு சிறப்பு தினமும் விமர்சையாக அனுசரிக்கப்பட உள்ளது. டிசம்பர் 19ஆம் தேதி 150 எடை கொண்ட சிறப்பு கிறிஸ்மஸ் தயாரிக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியின் இறுதி நாளான 26 ஜனவரி 2022 சிறப்பு தபால் தலை வெளியீடு செய்யப்பட உள்ளது என்று கூறினார்.