• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை விபத்துக்களை தடுப்பதில் தனி கவனம் – கோவை புதிய எஸ்.பி. பேட்டி !

July 12, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்துவேன் என்று கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள அருளரசு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 59 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கடந்த வாரம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது.அதன்படி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித் குமார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அருளரசுவை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று கோவை வந்த அவர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“கோவை மாவட்ட காவல் பொறுப்பேற்றுள்ளேன். கோவை மாவட்டம் அமைதியான மாவட்டமாகும். இன்னும் இந்த மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுப்பேன். கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், சாலை விபத்துக்களை தடுப்பதிலும் அதிக கவனம் செலுத்துவேன். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை 9498122422 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

மேலும் படிக்க