• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஆர்.டி.ஓ அலுவகத்தில் விழிப்புணர்வு பேரணி

February 4, 2019 தண்டோரா குழு

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று கோவை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணி துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சி தலைவர் பொறுப்பில் உள்ள துறை ரவிச்சந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தர்.

இதில் வட்டார போக்குவரத்து ஊழியர்கள், வாகன விற்பனை முகவர்கள், காவல்துறையினர், போக்குவரத்து துறை பயிற்சி மாணவர்கள் , தன்னார்வலர்கள் , என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாலசுந்தரம் சாலையில் துவங்கிய பேரணி, காந்திபுரம் வழியாக வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது. சாலை விதிகளை மதிப்போம், தலை கவசம் அணிய வேண்டும், குடி போதையில் வாகனத்தை இயக்க கூடாது , உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியபடி பேரணியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்பட்டுத்தினர்.

முன்னதாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பல்வேறு வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

மேலும் படிக்க