• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையோர கடை அமைப்பதற்கு ஆதார் கட்டாயம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

January 13, 2018 தண்டோரா குழு

சென்னையில் சாலையோர கடை அமைப்பதற்கு ஆதார் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சாலையோரங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி கோரி வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னையில் சாலையோரம் பெட்டிக் கடைகள் வைப்பதற்கு கண்டிப்பாக ஆதார் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு கடைக்கு அனுமதி பெற்றவர்கள் மீண்டும் வேறு ஒரு இடத்தில் கடைக்கு அனுமதி பெறாத வகையில் ஆதார் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் அருகே பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி அளிக்கக்கூடாது. பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது’ என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அரசின் பல்வேறு துறைகளில் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னையில் பெட்டிக்கடைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க