• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையை ஆக்கிரமித்திருந்த அதிமுக, கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் உள்பட 45 கட்டடங்கள் இடித்து அகற்றம்

December 29, 2022 தண்டோரா குழு

கோவை கிழக்கு மண்டலத்தில் சாலையை ஆக்கிரமித்திருந்த அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட 45 கட்டடங்கள்
அகற்றப்பட்டன.

கோவை மாநகராட்சியில் பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பு, சாலைகள் ஆக்கிரமிப்பு மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், மாநகரில் ஆக்கிரமிப்புப் பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் குழு அமைத்துள்ளார். இக்குழுவினர், 5 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கிழக்கு மண்டலம் எஸ்.ஐ.ஹெச். எஸ் காலனி 55 ஆவது வார்டு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வீடுகள், வணிகக் கட்டடங்கள், கட்சி அலுவலகங்களை காலி செய்ய கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், கட்டடங்களை காலி செய்ய ஒரு மாதம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் குழுவினர் புதன்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடித்து அகற்றினர்.

இதில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம், அதிமுக அலுவலகம், ஹெச்.எம்.எஸ். தொழிற்சங்க அலுவலகம் மற்றும் கடைகள் உள்பட 45 கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடத்துக்காக காத்திருப்பதால், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 12 வீடுகள் மட்டும் இடிக்கப்படவில்லை.

இதேபோல், மத்திய மண்டலம் 66ஆவது வார்டுக்கு உள்பட்ட சிவானந்தா காலனி புதுப்பாலம் அருகில் உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையிலான குழுவினர், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக, 5க்குமே மேற்பட்ட சாலையோரக் கடைகள், கட்டடங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து அகற்றினர்.

மேலும் படிக்க