• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 3.26 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்

November 20, 2020 தண்டோரா குழு

சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைக்க பெற்ற தகவலின் பேரில் தீபாவளி அன்று புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் ஏர் அரேபியா விமானம் G-9 413 விமானம் மூலம் வந்த பயனிகளை கண்காணித்தனர்.

கேரளா மாநிலம் காசர்கோடு, சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த பதினோறு பேரிடம் தங்கம் கொண்டு வரப்படுகிறதா? என விசாரணை மேற்கொண்டபோது இல்லை என மறுத்து உள்ளனர். அவர்களது செயல்கள் முன்னுக்கு பின் முரணான பேச்சால் சந்தேகம் அடைந்த புலனாய்ய் அதிகாரிகள் அவர்களை தீவிர சோதனை மேற்கொண்டபோது உள்ளாடைகளில் பசை வடிவத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கமும் ஆசனவாயில் மறைத்து எடுத்து வரப்பட்ட 1 கிலோ தங்கமும் என 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யபட்டது. பறிமுதல் செய்யபட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 3.26 கோடி ரூபாய் என வருவாய்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இவர்கள் கொண்டு வந்த சிகரெட், ஐ போன், மற்றும் டிரோன் ஆகியன பறிமுதல் செய்யபட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பதினோறு பேர் கைது செய்யபட்டு பின்னர் விடுவிக்கபட்டனர். தங்க கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் இந்த மாதம் இரண்டாவது முறையாக தங்க கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து அதிக அளவிலான கடத்தல் பொருட்களை கைபற்றபட்டு உள்ளதாக வருவாய்புலனாய்வு பிரிவு அலுவலகம் மூலம் அறிக்கை கொடுக்கபட்டு உள்ளது.

மேலும் படிக்க