July 13, 2020
தண்டோரா குழு
சார்ஜாவிலிருந்து கோவைக்கு சிறப்பு விமானத்தில் வந்த 171 பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா ஊரடங்கால் பிற நாடுகளுக்கு பணிக்கு சென்ற சிக்கியுள்ள இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா திரும்பி வருகின்றனர். சென்னையில் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னை வரும் சில விமானங்கள் கோவை விமானத்திற்கு தரையிரக்கப்பட்டு, பயணிகள் கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் சார்ஜாவில் இருந்து 171 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் நேற்று இரவு 9.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இதையடுத்து விமான நிலையத்திலிருந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் 5 குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகளை சேகரித்தனர்.இதையடுத்து அனைத்து பயணிகளும் அருகே உள்ள விடுதிகளில் ஒரு நாள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். நாளை பரிசோதனை முடிவுகள் வெளியான பின் பயணிகள் சொந்த ஊருக்கு சென்று 14 நாள் தனிமைபடுத்திக்கொள்வர்.