• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாய்பாபா காலனி கனரா வங்கி மூலம் குறுந்தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவி வழங்கல்

February 12, 2021 தண்டோரா குழு

கோவை சாய்பாபா காலனியில் உள்ள கனரா வங்கி கிளையின் மூலம்குறுந்தொழில் முனைவோர்களுக்கு முத்திரா கடன் திட்டத்தின் கீழ்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கனரா வங்கியின் கோவை மண்டல உதவி பொதுமேலாளர் ரமேஷ் முதல் கட்டமாக 10 தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று குறுந்தொழில் முனைவோர்களுக்கு முத்திரா கடன் திட்டத்தில் கடன் வழங்கிட உதவி செய்த கிளை மேலாளர்க்கும், மண்டல துணை பொது மேலாளர்க்கும் டாக்ட் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் நன்றி கூறினார்.

பின்னர் டாக்ட் மாவட்ட தலைவர் பேசுகையில்,

‘‘கோவையில் குறுந்தொழில் முனைவோர்கள், கொரோனா காலம் துவங்கி இன்று வரை கடும் நெருக்கடியில் இருந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மாவட்ட கலெக்டர் மூலம் 410 கடன் கோரும் விண்ணப்பம் கொடுத்ததில், சாய்பாபா காலணி கனரா வங்கி கிளையின் மூலம் மட்டும் 10 தொழில் முனைவோர்களுக்கு இதுவரை 20 லட்சம் வரை முத்திரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கி உள்ளது. இது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோல் கோவையில் உள்ள அனைத்து வங்கிகளும் குறுந்தொழில்
முனைவோர்களுக்கு முத்திரா கடன் திட்டத்தின் கீழ் முதலீட்டு கடன் வழங்கிட வேண்டும்,‘‘ என்றார்.

மேலும் படிக்க